Tuesday, December 18, 2007

க்க்

ல்,ல்,

ஒலியினைக் குறைபோம் செவியினைக் காப்போம்

பட்டாசு கொளுத்தும் போது தளர்ந்த (தொள தொள) ஆடைகளை அணிய வேண்டாம்.

கடினமான பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன் இறுக்கமாக இருப்பது நல்லது.

குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் வானவெடிகளையும், ராக்கெட் வெடிகளையும் வெடிப்பதைத் தவிர்க்கவும்.
குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள். பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம்.
கொளுத்திய பட்டாசுகளை ஒருவரை நோக்கிக் காட்டுவதோ, அல்லது தெருவில் எறிவதோ கூடாது.
பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் வெடிகளை வெடிக்கக்கூடாது. மீறி வெடிப்பவர்கள் காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படுவார்கள். தவறினால் சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.
முடிந்ததல் பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து விடுங்கள்; அல்லது குறைத்துக் கொள்ளுங்கள்.
நமது கவனக்குறைவினாலும், அலட்சியத்தினாலும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க, இந்த ஆண்டும் பட்டாசினைத் தவிர்த்து அல்லது குறைத்து ‘`மாசற்ற மற்றும் விபத்தில்லாப் பண்டிகையை’’ அனைவருடைய ஒத்துழைப்போடும் கொண்டாடுங்கள்.

மனித உறவுகள்

1. தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
2. அர்த்தமில்லாமலும், தேவையில்லாலும், பின்விளைவுஅறியாமலும கொண்டேயிருப்பதை விடுங்கள்.
3. எந்த விஷயத்தையும் பிரச்சினையையும் நாசூக்காகக் கையாளுங்கள்.
4. விட்டுக்கொடுங்கள்.
5. சில நேரங்களில் சில சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
6. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.
7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
8. உண்மை எது, பொய் எது, என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
9. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.

10. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்
11. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
12. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
13. அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.
14. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
15. மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
16. மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
18. பேச்சிலும், நடத்தையிலும் திமிர்தனத்தையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.
19. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள்.
20 பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன்வாருங்கள்.
21. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள்.பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும். -வேதாத்திரி மகரிசி

நீங்கள் நூற்றில் ஒருவரா?

இந்தியாவில் நூற்றுக்கு ஒருவர் ஆண்டுக்கு ஒரு முறை இரத்ததானம் செய்தால் கூட விபத்துக்களினால் இரத்தம் கிடைக்காமல் ஏற்படும் இறப்புகளைத் தவிர்க்கலாம். சாதாரணமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம். 18 லிருந்து 60 வயதுக்குட்பட்டோர் அனைவரும் இரத்ததானம் செய்யலாம். இரத்ததானம் செய்வதால் உடல் சோர்வோ உடலுக்கு எவ்விதமான தீங்கோ எற்படுவதில்லை.
தானம் செய்யவும் தகுதி வேண்டும்
1. 18 வயது முதல் 60 வயது வரை ஆண், பெண் இருபாலரும் இரத்ததானம் செய்யலாம்.
2. வலிப்பு, சர்க்கரை நோய், மலேரியா, மஞ்சள்காமாலை நோயுள்ளவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் இரத்ததானம் செய்யக்கூடாது.
3. அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆறு மாதத்திற்குப் பிறகு தான் இரத்ததானம் செய்யவேண்டும்.
4. நம் உடலில் 5 முதல் 7 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. இதில் 300 மி.லி. இரத்தம் மட்டுமே தானமாகப் பெறப்படுகிறது. வலியோ சிரமமோ இல்லாமல் 10 நிமிடத்தில் இரத்தம் எடுக்கப்படும்.
5. உடல் நலத்தோடு உள்ள ஒருவர் மூன்று மாதங்களுக்கொருமுறை இரத்ததானம் செய்யலாம். புதிதாக ஊறும் இரத்தம் உடலுக்குப் பொலிவுதரும்.
6. எத்தனை முறை இரத்தம் கொடுத்தாலும் ஆரோக்கியம் கெடுவதில்லை

ஒரு வயதுக் குழந்தையின் கண்கள் தானம்

இறந்தும் வாழும் இளந்தளிர் மழலையும் கூட மற்றவர் வாழ்வில் ஒளியூட்ட முடியும் என்பதற்கு உதாரணம் 13 மாதக் குழந்தை வசந்த். இப்போது உயிருடன் இல்லாவிட்டாலும், அந்த இளந்தளிரின் கண்கள் மூலம் இரண்டு பெண்கள் பார்வை பெற்றுள்ளனர்.
வசந்த்தின் தந்தை எம்.கல்யாணசுந்தரம் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர். ஐ.டி.ஐ. படித்த இவர், மின்சார வாரியத்தில் ஃபிட்டராகப் பணியாற்றுகிறார். இவரது மனைவி கீதாராணி (30), டெக்ஸ்டூல் நிறுவனத்தில் கிளார்க்காகப் பணியாற்றுகிறார். இவர்களுக்கு கௌதம் (5) என்ற மகன் இருக்கிறான்.
இந்தத் தம்பதிக்கு, 1997_ம் ஆண்டு செப்.21_ம் தேதி இரண்டாவது மகனாக வசந்த் பிறந்தான். மிகவும் சுட்டித்தனமான அந்தக்குழந்தை 6 மாதத்தில் நோய்வாய்ப்பட்டது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு காரணமாக, கடும் காய்ச்சல் தாக்கியது. சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 24_ம் தேதி வசந்த் இறந்தான்.
அப்போது, தந்தை கல்யாணசுந்தரம் அருகில் இல்லை. மேட்டுப்பாளையத்தில் இருந்து நேராக கோவை டாடாபாதில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு பணிக்கு வந்த அவரிடம் விவரம் தெரிவிக்கப்பட்டது. வீட்டுக்கு விரைந்த அவர், துக்கம் தாங்காமல் அழுதார்.
மனித நேயம்
அந்த நேரத்திலும் `மனித நேயம்' அவரைச் சிந்திக்கத் தூண்டியது. தனது நண்பர்கள் சிலரை அழைத்து, `குழந்தையின் கண்களைத் தானம் செய்ய வேண்டும்' என்றார். நண்பர்களுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. குழந்தையின் சடலத்தின் மீது அழுது புரண்டு கொண்டிருந்த தாயையும் சமாதானப்படுத்தி, அவரிடமும் இதுபற்றிப் பக்குவமாக எடுத்துக் கூறினார். அந்த வேதனையிலும் அவர் சம்மதம் கொடுத்தார்.
அரவிந்த் கண் மருத்துவமனைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவர் குழு உடனடியாக விரைந்து வந்து, அந்தப் பிஞ்சுக் குழந்தையின் இரண்டு விழிகளையும் எடுத்துச் சென்றது. உடனே வசந்த்தின் ஒவ்வொரு விழியிலிருந்தும் நிறமிலி இழைமப் பகுதியை ( `கார்னியா' ) எடுத்து இரண்டு பெண்களுக்கு மருத்துவர்கள் பொருத்தினர். பிஞ்சின் கண்ணைத் தானமாகப் பெற்ற ஒரு பெண்ணுக்கு வயது 26. மற்றொரு பெண்ணின் வயது 40.
இருவரும் கண்ணில் அடிபட்டு ஒரு விழியையே இழந்தவர்கள். வசந்த் கண்கள் மூலம் தற்போது முழுமையான பார்வையைப் பெற்றுள்ளனர்.
துக்கத்தில் இருந்த குழந்தையின் தந
`எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் உண்டு. இதனால் பல விஷயங்கள் தெரியும். அதில் ஒன்றுதான் கண்தானம். நாங்கள் உயிருக்கு உயிராக நேசித்த எங்கள் குழந்தை இறந்துவிட்ட துக்கம் இருந்தாலும், அந்தக் குழந்தையின் மூலம் இரண்டு பேருக்குப் பார்வை கிடைக்கும் என்ற ஆசையால் தான் கண்தானம் செய்தோம்.
குழந்தையின் கண்களைத் தானம் செய்தது, டாக்டர்கள் வந்து கண்களை எடுத்துச் செல்லும் வரை பெரியவர்கள் யாருக்கும் தெரியாது. தெரிந்த பிறகு சிலர் ஆட்சேபித்தார்கள். பின்னர் சமாதானமடைந்தனர்' என்றார் கல்யாணசுந்தரம்.
`எங்கள் மகன் இறந்துவிட்டதாக நான் இப்போதும் நினைக்கவில்லை. அவனது கண்கள் மூலம் இருவரது உடலில் அவன் வாழ்கிறான்' என்று கண்ணீர் மல்கக் கூறினார் கீதாராணி.
`ஒருவயதுக்குழந்தையின் கண்களைத் தானமாகப் பெறுவது இதுவே முதல் முறை. வழக்கமாக, 17_18 வயதுக்கு மேற்பட்டவர்களின் கண்கள்ததான் தானமாகக் கிடைக்கும். குழந்தையின் கண்களைத் தானமாகக் கொடுத்த பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்' என்றார் அரவிந்த் கண் மருத்துவமனை கருவிழி சிகிச்சை மற்றும் கண் வங்கி மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர். ரேவதி. நன்றி: தினமணி

ஏனிந்த வலைப்பதிவு ?

வணக்கம்.
படித்த செய்திகள், கட்டுரைகள், சிறுசிறு நூல்களை கருத்துப்பரப்பும் நோக்கில் அவ்வப்போது துண்டறிக்கைகளாகவும், சிறு சிறு நூல்களாகவும் வெளியிடுவது என் வழக்கம். அப்படி வெளியிட்ட பலவற்றில் சிலவற்றைக் குறுவட்டில் பதிந்து வைத்திருந்தேன். "நாளைவிடியும்" இதழுக்காக வலைப்பதிவினைத் தொடங்கிய போது
நாம் வெளியிட்ட துண்டறிக்கைகளையும் சிறு சிறு நூல்களையும் பதிவேற்றினாலென்ன என்று எண்ணியதன் விளைவே "அறிவுச்சுடர்" என்கிற இந்த வலைப்பதிவு.
-பி.இரெ.அரசெழிலன்